யுஜிசி - நெட் தேர்வு:மிக்ஜம் பாதிப்பில் இருந்து சென்னை மீளவில்லை என்பதை மத்திய கல்வித்துறை அறியாதா? 

மிக்ஜம் புயலின் பாதிப்புகளில் இருந்து சென்னை இன்னும் மீளவில்லை என்பதை மத்திய கல்வித்துறை அறியாதா? என மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
யுஜிசி - நெட் தேர்வு:மிக்ஜம் பாதிப்பில் இருந்து சென்னை மீளவில்லை என்பதை மத்திய கல்வித்துறை அறியாதா? 

இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசியர் மற்றும் இளநிலை ஆய்வு முனைவருக்கான தகுதித் தேர்வான யுஜிசி நெட் தேர்வு புதன்கிழமை(டிச.6)சென்னையில் பல மையங்களில் நடைபெறுகிற நிலையில், மிக்ஜம் புயலின் பாதிப்புகளில் இருந்து சென்னை இன்னும் மீளவில்லை என்பதை மத்திய கல்வித்துறை அறியாதா? என மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

யுஜிசி நெட் தேர்வு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதித் தேர்வாகும். தேசிய அளவிலான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசியர் மற்றும் இளநிலை ஆய்வு முனைவருக்கான படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இந்த தேர்வில் தேர்ச்சி அடைய வேண்டும்.இந்த தகுதித் தேர்வான யுஜிசி நெட் தேர்வு ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள யுஜிசி-நெட் தேர்வு குறித்த அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டிருந்தது.அதன்படி நெட் தேர்வுக்கு 30.09.2023 முதல் 28.10.2023 வரை விண்ணப்பிக்கலாம் என்றும், தேர்வானது 06.12.2023 முதல் 22.12.2023 வரை கணினி வழி நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தது. 

தகுதியானவர்கள் https://ugcnet.ntaonline.in/ என்ற இணையதள வாயிலாக தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம். தேர்வுக்கான நுழைவுச் சீட்டானது வரும் டிசம்பர் மாதம் https://www.nta.ac.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்திருந்தது. 

இந்த அறிவிப்பின்படி புதன்கிழமை (டிச.6) தொடங்கி டிச.22 வரை தேர்வுகள் நடைபெறவுள்ளன.சென்னையில் பல மையங்களில் தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த நிலையில்,மிக்ஜம் புயலின் பாதிப்புகளில் இருந்து சென்னை இன்னும் மீளவில்லை என்பதை மத்திய கல்வித்துறை அறியாதா? என மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து யுஜிசி தலைவருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில், அரசின் உயர் கல்வித்துறை யுஜிசி - நெட் தேர்வுகளை புதன்கிழமை(டிச.6) சென்னையில் பல மையங்களில் நடத்துகிறது.

மிக்ஜம் புயலின் பாதிப்புகளில் இருந்து சென்னை இன்னும் மீளவில்லை என்பதை ஒன்றிய கல்வித்துறை அறியாதா? 

தேர்வுத் தேதியை வேறு தேதிக்கு மாற்றி சென்னை மாணவர்களுக்கு நியாயம் வழங்குங்கள் என வலியுறுத்தியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com