தண்டையார்பேட்டை பகுதியில் அமைச்சர் சேகர் பாபுவை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்!
சென்னை: சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் புயலால் பாதிப்படைந்த பகுதிகளில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்ட போது அந்த பகுதி மக்கள் ஒன்று திரண்டு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் புயலால் பாதிப்படைந்த பகுதிகளில் புதன்கிழமை இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்ட போது, அந்த பகுதி மக்கள் ஒன்று திரண்டு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இதனால் அந்த பகுதி பரபரப்பு நிலவியது.
அதன் பின்னர் அமைச்சர் சேகர்பாபுவின் சமரசப் பேச்சு வார்த்தைக்கு பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதையும் படிக்க | மீட்புப் பணிகள்: தொண்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசு அழைப்பு
இதனைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர் ஒன்றிணைந்து ஆய்வுகள் மேற்கொண்டு தண்டையார்பேட்டை பகுதி மக்களுக்கு உணவுப் பொருட்கள் அனுப்பும் பணியினை தீவிரமாக மேற்கொண்டு, களப்பணி நடவடிக்கைகள் தொடர்பாக அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.
மேலும், இந்த நிகழ்ச்சியின் போது ஆர்.கே.நகர் சட்டப்பேரவை உறுப்பினர் எபினேசர், மண்டலக் குழுத் தலைவர் நேதாஜி கணேசன் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

