சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஹெலிகாப்டரில் சென்று புயல் பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறார்.
மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிச. 3, 4 ஆம் தேதிகளில் பெய்த தொடர் கனமழை, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ள நீர் தேங்கியுள்ள இடங்களில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க, வெள்ள நீரை அகற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பல தன்னார்வலர்களும் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க | புயல் பாதிப்பு: முதல்வர் ஸ்டாலினுடன் மோடி பேச்சு!
இந்நிலையில், புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்துள்ளார். அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் அவரை வரவேற்றனர்.
தொடர்ந்து அமைச்சர் ராஜ்நாத் சிங், மிக்ஜம் புயல் பாதிப்புகளை ராணுவ ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அவருடன் மத்திய இணையமைச்சர் எல். முருகனும் உள்ளார்.

முன்னதாக, தமிழகத்திற்கு இடைக்கால நிவாரணமாகரூ. 5,060 கோடியினை உடனடியாக வழங்கிடுமாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு புதன்கிழமை கடிதம் எழுதியிருந்தார். இதனை திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, தில்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து இன்று வழங்கினார். தொடர்ந்து, பிரதமர் மோடியும், புயல் பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசியில் பேசினார்.
இதையும் படிக்க | புழல் ஏரியில் அமைச்சர்கள் துரைமுருகன், மூர்த்தி நேரில் ஆய்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடப்பு 2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல்: ரூ.5.21 லட்சம் கோடியைக் கடந்தது!

வா்த்தகம்...வெளிநாடு வாழ் இந்தியா்களுக்காக புதிய வைப்புத் திட்டம்: 6.25% வரை வட்டி

மாணவா்களின் தலைமைத்துவ திறன்களை என்சிசி உருவாக்குகிறது: இயக்குநா் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ்







