வெள்ள நிவாரண நிதியாக விசிக சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜம் புயலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிட முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். தன்னுடைய ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாகவும் அனைத்து சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறும் கூறியிருந்தார்.
அதன்படி, அமைச்சர்கள், திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் இணைந்து ரூ. 10 லட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர்.
விசிக தலைவர் தொல். திருமாவளவன், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து இந்த தொகையினை வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.