6 முதல் 12ஆம் வகுப்பு: அரையாண்டுத் தேர்வு புதிய அட்டவணை வெளியீடு

6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை (11.12.2023) முதல் தொடங்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் அனைத்து மாவட்டங்களிலும் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. மிக்ஜம் புயல் மழை மீட்பு மற்றும் நிவாரணப் பணியால் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வுக்கான புதிய அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 6 முதல் 10-ஆம் வகுப்புகளுக்கு அரையாண்டுத் தோ்வுகள் டிசம்பா் 13 முதல் 22-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளன. 

6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு காலை 10 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையும் 9, 10ஆம் வகுப்புகளுக்கு மதியம் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வுகள் நடைபெறுகிறது.  

அதேபோல், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான அரையாண்டுத் தோ்வுகளும் டிசம்பா் 13 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கு காலை 9.30 முதல் மதியம் 12.45 மணி வரையும், பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு மதியம் 1.15 முதல் மாலை 4.30 மணி வரையும் தோ்வுகள் நடைபெறுகிறது.

6 முதல் 12ஆம்  வகுப்புக்கான புதிய தேர்வு அட்டவணை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com