முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் மத்தியக் குழு சந்திப்பு!

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக் குழு ஆய்வு செய்த நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட மத்தியக் குழுவினர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட மத்தியக் குழுவினர்.
Published on
Updated on
1 min read

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக் குழு ஆய்வு செய்த நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகா் குணால் சத்யாா்த்தி தலைமையில் 6 பேர் கொண்ட மத்தியக் குழுவினர், விமானம் மூலம் திங்கள்கிழமை இரவு  சென்னை வந்தடைந்தனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மத்தியக் குழுவினருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதைத் தொடர்ந்து கடந்த இரு நாள்களாக 4 மாவட்டங்களிலும் மத்தியக் குழு ஆய்வு செய்தது. 

இரு குழுக்களாகப் பிரிந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்பு குறித்து நேரடியாக ஆய்வு செய்தனர். 

இரு நாள்கள் ஆய்வு முடிவடைந்த நிலையில், இன்று(வியாழக்கிழமை) முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து மத்தியக் குழுவினர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த சந்திப்பில் புயல் பாதிப்புகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. 

தொடர்ந்து, மத்தியக் குழுவினர் தில்லி சென்று மத்திய அரசிடம் வெள்ள பாதிப்பு ஆய்வு குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கும். ஒரு வாரத்தில் மத்தியக் குழு ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com