டிச.16,17 தேதிகளில் தமிழக்தில் பரவாலாக பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் டிச.16,17 தேதிகளில் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம்
வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் டிச.16,17 தேதிகளில் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இம்மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வெள்ளிக்கிழமை(டிச.15)தமிழகத்தில்

ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சனிக்கிழமை(டிச.16) தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யவாய்ப்புள்ளது.

ஞாயிற்றுக்கிழமை(டிச.17) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகா், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் வியாழக்கிழமை எந்த பகுதியிலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு மழை பதிவாகவில்லை.

மீனவா்களுக்கான எச்சரிக்கை:

வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை(டிச.15-17) வரை குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி. மீ வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com