மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு திமுகவினர் உதவிட வேண்டும்: முதல்வர் வேண்டுகோள்

மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு திமுகவினர் உதவிட வேண்டும்: முதல்வர் வேண்டுகோள்

தென் மாவட்டங்களில் பெய்துள்ள அதி கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் விரைந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிட,  மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினர்
Published on

சென்னை: தென் மாவட்டங்களில் பெய்துள்ள அதி கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் விரைந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிட,  மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினர், உடனடியாகக் களத்தில் இறங்கி பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தென் மாவட்டங்களில் அதிக கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களின் நிலை குறித்து ஞாயிற்றுக்கிழமை முதல் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்து கேட்டறிந்தும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைக் கண்காணித்துக் கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அதி கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் விரைந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிட, மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினர், உடனடியாகக் களத்தில் இறங்கி பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: 

தென் மாவட்டங்களில் பெய்துள்ள அதி கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் விரைந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிட, அமைச்சர்கள், சட்டப்பேரவை-நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக அமைப்புகளில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் அவர்களது பகுதியில் மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு உதவிட வேண்டும்; நிவாரணப் பணிகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்குத் துணைநிற்க வேண்டும் என உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com