
கன்னியாகுமரி கடல் பகுதியில் காற்று வேகமாக வீசுவதால் சுற்றுலா படகு சேவை தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது.
விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளூர் சிலைக்கு செல்லும் சுற்றுலா படகு சேவை தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது. நிலைமை சீரானதும் மீண்டும் தொடங்கப்படும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். இவா்கள் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலை ஆகியவற்றை படகுகள் மூலம் சென்று பாா்வையிடுகின்றனா்.
இந்த நிலையில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் கனமழை காரணமாக, முக்கடல் சங்கமம் உள்ளிட்ட பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றன.
இதையும் படிக்க: முழு வீச்சில் நடைபெறும் எண்ணெய் அகற்றும் பணி: சிபிசிஎல்
கன்னியாகுமரியில் இருந்து நாகா்கோவில், திருநெல்வேலி செல்லும் முக்கிய சாலைகளிலும் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.