திருநெல்வேலி ரயில் நிலையம் செயல்படத் தொடங்கியது

திருநெல்வேலி ரயில் நிலைய சீரமைப்புப்பணிகள் நிறைவடைந்ததால், ரயில் நிலையம் செவ்வாய்க்கிழமை மாலை முதல் செயல்படத் தொடங்கியதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி ரயில் நிலையம் செயல்படத் தொடங்கியது


சென்னை: திருநெல்வேலி ரயில் நிலைய சீரமைப்புப்பணிகள் நிறைவடைந்ததால், ரயில் நிலையம் செவ்வாய்க்கிழமை மாலை முதல் செயல்படத் தொடங்கியதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்தது. இதில், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலைய தண்டவாளம் மற்றும் நடைமேடை மழை வெள்ளத்தில் மூழ்கியது. அதேபோல், திருநெல்வேலி சந்திப்பு - தாழையூத்து இடையே தண்டவாளத்தில் கீழ் உள்ள ஜல்லி கற்களை மழை வெள்ளம் அடித்து சென்றது. ஸ்ரீவைகுண்டம் பகுதியிலுள்ள தண்டவாளம் கீழ்ப்பகுதி ஜல்லி மற்றும் மண் அரித்து செல்லப்பட்டது.

மழை ஓய்ந்ததையடுத்து சீரமைப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் தேங்கிய மழைநீா் மோட்டாா் மூலம் வெளியேற்றப்பட்டது. செவ்வாய்க்கிழமை இரவு ரயில் நிலையத்தில் தண்ணீா் முற்றிலும் அகற்றப்பட்டது.

ரயில்நிலைய பணிமனையில் ‘பிட்லைன்’ எனப்படும் ரயில்களை நிறுத்தி வைக்கும் தண்டவாளமும் சீரமைக்கப்பட்டது. இதையடுத்து ரயில்நிலையம் செவ்வாய்க்கிழமை மாலை முதல் ரயில்களை இயக்க தயாரானது. முதல் ரயிலாக இரவு 11.05 மணிக்கு காந்திதாம்-திருநெல்வேலி ரயில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்தது.

ரயில் நிலையம் தயாரானதையடுத்த எழும்பூரிலிருந்து திருநெல்வேலி செல்லும் நெல்லை விரைவு ரயில் வழக்கம் போல் திருநெல்வேலி வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முன்னதாக இந்த ரயில் மதுரை வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது போன்று மற்ற ரயில்களும் படிப்படியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com