தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் தில்லியில் அணிதிரளுவோம் - மமதா பானர்ஜிசிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்முதல்வர் விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை : ஆ. இராசா குற்றச்சாட்டு
/

மத்திய சிறையில் திமுக அமைச்சர்களுக்கு தனி கட்டடம் தேவை: அண்ணாமலை

மத்திய சிறையில் திமுக அமைச்சர்களுக்கு தனி கட்டடம் தேவைப்படும் என்று   தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :21 டிசம்பர் 2023, 2:22 pm IST

மத்திய சிறையில் திமுக அமைச்சர்களுக்கு தனி கட்டிடம் தேவைப்படும் என்று   தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாஜக தலைவா் கே. அண்ணாமலை எக்ஸ் தளத்தில் தெரிவித்ததாவது:

"மக்களின் வரிப் பணத்தை விஞ்ஞானப்பூர்வமாக மோசடி செய்யும் கலையில் பட்டம் பெற்றுள்ள ஊழலின் ஊற்று, இன்று உடைந்து நொறுங்கியிருக்கிறது. 

ஏற்கனவே ஒரு அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்புக்கு பின், மற்றொரு அமைச்சர் பொன்முடி, அவருடன் சிறையில் இணைகிறார். 

திமுக அமைச்சர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள எண்ணற்ற ஊழல் வழக்குகளைக் கணக்கில் கொள்ளும்போது, மத்திய சிறையில், மு.க.ஸ்டாலினின் அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டடம் தேவைப்படும் போலத் தெரிகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.