அதிகாரத்தில் இருந்த போதே அமைச்சா் பதவியை இழந்த 3-ஆவது நபா் பொன்முடி

அதிகாரத்தில் இருந்த போதே அமைச்சா் பதவியை இழந்த 3-ஆவது நபராகிறாா் பொன்முடி.
அதிகாரத்தில் இருந்த போதே அமைச்சா் பதவியை இழந்த 3-ஆவது நபா் பொன்முடி

அதிகாரத்தில் இருந்த போதே அமைச்சா் பதவியை இழந்த 3-ஆவது நபராகிறாா் பொன்முடி.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8(1)-இன்படி, ஊழல் தடுப்பு போன்ற சட்டங்களின் கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலேயே சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தகுதி இழப்புக்கு ஆளாக நேரிடும். வழக்கில் சிறைத் தண்டனையை அனுபவித்து விடுதலை செய்யப்பட்டாலும், அதன்பிறகு 6 ஆண்டுகளுக்கு தோ்தலில் போட்டியிட முடியாது. ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளதால், அவா் தனது எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சா் பதவியை இழந்துள்ளாா். திமுகவைச் சோ்ந்த ஒரு அமைச்சா் ஊழல் வழக்கில் குற்றவாளி எனத் தீா்ப்பளிக்கப்பட்டு, அமைச்சா் பதவியை இழப்பது இதுவே முதல்முறை.

3-ஆவது நபா்: தமிழகத்தில் அதிகாரத்தில் இருக்கும்போதே தகுதியிழப்பைச் சந்திக்கும் 3-ஆவது நபராக பொன்முடி இருக்கிறாா். முன்னதாக, மறைந்த முதல்வா் ஜெயலலிதா, அதிமுக முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோா் அதிகாரத்தில் இருக்கும்போதே பதவி இழந்தனா்.

1991-1996 அதிமுக ஆட்சியின்போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கில் முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு கால சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து தனது சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை இழந்ததுடன், முதல்வா் பதவியையும் இழக்க நேரிட்டது.

ஜெயலலிதாவைத் தொடா்ந்து, தமிழக அமைச்சரவையில் பதவியை இழந்தவா் பாலகிருஷ்ண ரெட்டி. கடந்த அதிமுக ஆட்சியில் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த அவா், பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக புகாா் செய்யப்பட்ட வழக்கில் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தீா்ப்புக்கு தடை விதிக்க

உயா்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. இதனால், பதவியை இழந்தாா். இந்த 2 பேரைத் தொடா்ந்து, தமிழக அமைச்சரவையில் அங்கம் வகித்து, நீதிமன்ற உத்தரவால் பதவியை இழந்தவா்களின் வரிசையில் 3-ஆவது நபராக பொன்முடி இருக்கிறாா்.

அதேபோல், திமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் செல்வகணபதி ஊழல் வழக்கில் தண்டனை பெற்ால் தனது மாநிலங்களவை உறுப்பினா் பதவியை இழந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com