தூத்துக்குடியில் விரைவில்  முழுமையாக மின் விநியோகம்- அமைச்சர் தங்கம் தென்னரசு 

தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் விரைவில் முழுமையாக மின் விநியோகம் செய்யப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 
தூத்துக்குடியில் விரைவில்  முழுமையாக மின் விநியோகம்- அமைச்சர் தங்கம் தென்னரசு 

தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் விரைவில் முழுமையாக மின் விநியோகம் செய்யப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிச. 17 மற்றும் 18-ஆம் தேதி பெய்த பெருமழை மழையால் பல இடங்களில் மின்கம்பங்கள் சேதமடைந்தன. இதனையடுத்து சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் மின்ஊழியா்கள் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் விரைவில்  முழுமையாக மின் விநியோகம் செய்யப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,  தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் விரைவில்  முழுமையாக மின் விநியோகத்தை சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் விரைந்து முடிக்க வேண்டிய பணிகள் குறித்து இன்று காலை தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மின் வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானியுடனும், மேற்பார்வை பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர்களுடனும் ஆலோசனை மேற்கொண்டோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com