பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழா: பிரதமர், முதல்வர் பங்கேற்பு!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். 

News image
Updated On :26 டிசம்பர் 2023, 12:46 pm

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். 

பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கு கீழ் பல்வேறு மாவட்டங்களில் 130க்கும் அதிகமான கல்லூரிகள் இயங்குகின்றன. இந்தக் கல்லூரிகளில் பயின்ற மாணவர்களுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு முதல் கரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பட்டமளிப்பு விழா நடைபெறாமல் இருந்தது.

பட்டமளிப்பு விழாவை நடத்த வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் அவ்வபோது போராட்டத்திலும் ஈடுபட்டுவந்தனர். அதனைத் தொடர்ந்து பட்டமளிப்பு விழா நடைபெறாத பல்கலைக் கழகங்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்துவதற்கான தேதி ஒதுக்கப்பட்டது.

அதன்படி, பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் ஜனவரி 2ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவுள்ளனர். 

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க 1,528 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கில்,  600 மாணவர்கள் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக பல்கலைக் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாணவர்கள் பல்கலைக் கழக வளாக அரங்குகளில் அமரவைக்கப்பட்டு பட்டம் பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.