ரூ.1 கோடி கொடுத்தும் கொக்ககோலா விளம்பரத்தில் நடிக்க மறுத்தவர் விஜயகாந்த்!

ரூ.1 கோடி கொடுத்தும் கொக்ககோலா விளம்பரத்தில் நடிக்க மறுத்து அவர்களை திருப்பி அனுப்பி வைத்தவர் விஜயகாந்த்.
ரூ.1 கோடி கொடுத்தும் கொக்ககோலா விளம்பரத்தில் நடிக்க மறுத்தவர் விஜயகாந்த்!


தமிழ்நாடும், தமிழ் மக்களும் தான் முக்கியம் என்னால் தமிழக நிறுவனம் பாதிக்கபடும் என்றால் அந்த விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறி ரூ.1 கோடி கொடுத்தும் கொக்ககோலா விளம்பரத்தில் நடிக்க மறுத்து அவர்களை திருப்பி அனுப்பி வைத்தவர் விஜயகாந்த்.

‘நாராயணன் விஜயராஜ் அழகர்சுவாமி' என்ற இயற்பெயர் கொண்டவர், தமிழ் திரையுலகில் விஜயகாந்த் என்ற பெயரில் அறியப்படுகிறார். 

இவர் தமிழ் திரையுலக பிரபல முன்னணி முக்கிய நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் தமிழக அரசியல்வாதியும் ஆவார். 

விஜயகாந்த் 1979 ஆம் ஆண்டு 'அகல் விளக்கு' திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 2015-ஆம் ஆண்டு வரை 150-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து தமிழ் மக்களின் அன்பை கவர்ந்து பிரபலமானவர். 

1998 - ஆம் ஆண்டில் கொக்ககோலா நிறுவனம் தனது விளம்பர படத்தில் நடிப்பதற்காக  விஜயகாந்திடம் ரூ.1 கோடி சம்பளம் தருகிறோம் எங்களின் கொக்ககோலா நிறுவனத்திற்காக நீங்கள் நடித்து தர வேண்டும் என்று அந்த நிறுவனத்தினர் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

அந்த கால கட்டத்தில் ரூ.1 கோடி என்பது இன்றைய கால கட்டத்தில் கிட்டத்தட்ட ரூ.30 கோடி. ஆனால் விஜயகாந்த்  அந்த நிறுவனத்திடம் ஒரு கேள்வி கேட்டார்.அதாவது,நான் உங்கள் கொக்ககோலா விளம்பரத்தில் நடித்தால் உண்மையிலேயே என் ரசிகர்கள் அனைவரும் வாங்குவார்கள். என் முகத்திற்காக பொதுமக்கள் அனைவரும் உங்கள் கொக்ககோலா குளிர்பானத்தை வாங்கி அருந்துவார்கள். இதனால் பாதிக்கப்பட போவது என் தமிழ் மக்கள் தான். ஏன் என்றால் என் தமிழகத்தில் சிறு சிறு  குளிர்பான நிறுவனம் உள்ளது. நான் உங்கள் கொக்ககோலா நிறுவனம் கொடுக்கும் பணத்திற்காக நடித்தால் தமிழகத்தில் உள்ள சிறிய குளிர்பான நிறுவனம் பாதிக்கப்படும். அதனால் எனக்கு பணம் முக்கியம் இல்லை. எனக்கு தமிழ்நாடும், தமிழ் மக்களும் தான் முக்கியம். என்னால் தமிழக நிறுவனம் பாதிக்கப்படும் என்றால் அந்த விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன். அப்படியொரு பணம் எனக்கு தேவையில்லை என கொக்ககோலா நிறுவனத்தினரை திருப்பி அனுப்பிவைத்தார்  விஜயகாந்த்.

அப்படிப்பட்ட பொதுநல மனிதனை தான் இந்த தேசம் இன்று இழந்து தவிக்கிறது. 

அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com