மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் இன்று தொடங்கியது.
இத்திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தார். அதன்படி அழகர்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாள்முழுவதும் இலவச லட்டு வழங்கப்படும்.
இதேபோல் திருப்பரங்குன்றம் முருகன், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலிலும் பிரசாதம் தரும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ராமேஸ்வரம், திருவண்ணாமலை கோயிலிலும் தினமும் பிரசாதம் தரும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோயில்களில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் கடந்த 2022 ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்னர் இந்த திட்டம் படிபடியாக பல்வேறு கோயில்களில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.