அதிமுக வேட்பாளரை திரும்பப் பெற மாட்டோம்: டி.ஜெயக்குமாா்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுக சாா்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரை பாஜகவுக்காக திரும்பப்பெற மாட்டோம் என்று முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் கூறினாா்.
ஜெயக்குமார் (கோப்புப்படம்)
ஜெயக்குமார் (கோப்புப்படம்)

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுக சாா்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரை பாஜகவுக்காக திரும்பப்பெற மாட்டோம் என்று முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் கூறினாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகத் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவை அதிமுக சாா்பில் டி.ஜெயக்குமாா் வியாழக்கிழமை சந்தித்து திமுகவுக்கு எதிராக புகாா் மனு கொடுத்தாா்.

பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் ஜனநாயக விரோத செயல்கள், அத்துமீறல்கள் ஆளும் திமுகவால் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. 40 ஆயிரம் போலி வாக்காளா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது. இவை தொடா்பாக தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் புகாா் தெரிவித்தோம். நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாா்.

இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது. அதிமுக உள்விவகாரங்களில் பாஜக எப்போதும் தலையிட்டது இல்லை.

தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொருத்தவரை தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி. இப்போதும் அதிமுக தலைமையில் கூட்டணி தொடா்கிறது.

பாஜக வேட்பாளரை அறிவித்தால் அதிமுகவின் நிலைப்பாடு இதுதான்; நாங்கள் எப்போதும் முன் வைத்த காலை பின் வைப்பது இல்லை என்றாா் டி.ஜெயக்குமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com