தைப்பூசம் : திருச்செந்தூரில் லட்சக்கணக்கானோர் தரிசனம்

தைப்பூசம் : திருச்செந்தூரில் லட்சக்கணக்கானோர் தரிசனம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
Published on

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

அசூரரான சூரபத்மனை வதம் செய்வதற்கு முருகப்பெருமான் வேல் வாங்கிய விழாவாக கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவன்று முருகனை தரிசனம் செய்ய திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். 

இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, தொடர்ந்து பூஜைகள் நடைபெற்றது.

பக்தர்கள் வசதிக்காக  சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன. தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களாகவே திருச்செந்தூருக்கு மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து விரதமிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூர் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com