காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

ஈரோடு இடைத்தேர்தல்: 2 கம்பெனி மத்தியப் படை வீரர்கள் வருகை!

இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 2 கம்பெனி மத்தியப் படை வீரர்கள் ஈரோடு வந்தடைந்தனர்.

News image

கோப்புப் படம்

Updated On :11 பிப்ரவரி 2023, 5:17 am

DIN

இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 2 கம்பெனி மத்தியப் படை வீரர்கள் ஈரோடு வந்தடைந்தனர்.

மத்திய தொழில் பாதுகாப்புப் படை, ரயில்வே பாதுகாப்புப் படை என மொத்தம் 2 கம்பெனியைச் சேர்ந்த 180 வீரர்கள் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு வந்தனர். 

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது.  இந்த இடைத்தோ்தலில் 77 போ் போட்டியிடுகின்றனா்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழா் கட்சி சார்பில் மேனகா உள்பட 77 போ் போட்டியிடுகின்றனர். 

இதனிடையே ஈரோடு கிழக்குத் தொகுதியில் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணி கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து வீடுவீடாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

நட்சத்திர பிராரமும் நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து முதல்வா் மு.க.ஸ்டாலின், பிப். 24, 25 ஆகிய 2 நாள்கள் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். 

நட்சத்திர பிரசாரங்களின் காரணமாக ஈரோடு கிழக்குத் தொகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்புப் பணியையொட்டி 2 கம்பெனி மத்தியப் படை வீரர்கள் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு வந்துள்ளனர். 
    

மேலும் கூடுதலாக  3 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படையினர் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பணிக்காக அமர்த்தப்படுவர் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.