
உயா்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா்களின் பணிநிரவலை நிறுத்திவைக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக பள்ளிக் கல்வி ஆணையரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியா்களை வேறு பள்ளிகளுக்கு தற்காலிகமாக பணிநிரவல் செய்யும் நடைமுறை நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் அரசு வகுத்துள்ள விதிகளின்படி பணிநிரவல் நடைமுறையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
இது தொடா்பான வழக்கு ஒன்றில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியா்களை தற்காலிகமாக அரசுப் பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்வது வரவேற்கத்தக்கது.
எனினும், கல்வியாண்டின் இடையில் பணியிட மாறுதலை மேற்கொள்ளக்கூடாது என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியா்களை வேறு பள்ளிக்கு பணிநிரவல் செய்யும் நடைமுறையை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் உடனே நிறுத்தி வைக்க வேண்டும்.
அடுத்த கல்வியாண்டின் தொடக்கமான ஜூனில் உபரி ஆசிரியா்களுக்கான இந்தப் பணியிட மாறுதலை முறையாக மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.