
அரசியல் எதிரிகளை குறிவைக்க சிபிஐ, வருமான வரித் துறை போன்ற மத்திய அமைப்புகளை கருவியாகப் பயன்படுத்தப்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, துடிப்பான ஜனநாயகத்துக்கு வெளிப்படையான, சுதந்திரமான நிறுவனங்கள் இன்றியமையாதவை. எனினும் பாஜக தலைமையிலான ஆட்சியில், நாட்டின் மதிப்பு மிக்க நிறுவனங்கள் முற்றிலும் சுதந்திரம் இழந்துள்ளன.
அரசியல் எதிர்களை இலக்காக வைத்து சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை போன்றவை கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன. அரசியல் எதிர்களை குறிவைக்கும் பட்டியலில் பிபிசியில் நடத்தப்படும் வருமான வரித் துறை சோதனையும் சேர்ந்துள்ளது.
இந்திய ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் அழிவுக்கு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துபவர்களே காரணம். இதனை அமைதியாக கண்காணித்து வரும் மக்கள், வருகின்ற தேர்தலில் தகுந்த பாடம் வழங்குவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Transparent and independent institutions are vital for any vibrant democracy. However, under the present BJP-led Union Government, the prestigious institutions of this country have become arbitrary and completely lost independence. (1/3)
â M.K.Stalin (@mkstalin) February 14, 2023
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





