கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழகத்தில் 40 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
கோவை உக்கடம் அருகே கடந்தாண்டுப் அக்டோபர் மாதம் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு இடங்களில் சோதனை என்ஐஏ அதிகாரிகள் பலமுறை செய்துள்ளனர்.
இந்நிலையில், இன்று காலைமுதல் தமிழகம், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பில் இருப்பதாக சந்தேகப்படும் 60 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, கோவை, நெல்லை, தென்காசி, மயிலாடுதுறை உள்பட தமிழகத்தில் மட்டும் 40 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | ‘க்யூட்’ நுழைவுத் தேர்வு: தமிழக மாணவர்கள் விண்ணப்பிப்பதில் சிக்கல்
கோவை, உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்தாண்டு அக்டோபா் 23ஆம் தேதி நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவத்தில் காரில் இருந்த ஜமேஷா முபீன் (29) அதே இடத்தில் உயிரிழந்தாா். முபீன் வீட்டில் போலீஸாா் நடத்திய சோதனையின்போது, ஏராளமான வெடிபொருள்கள், ஐஎஸ் அமைப்புடன் தொடா்புடையதாக பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
இதைத் தொடா்ந்து, காா் வெடிப்பு சம்பவத்தில் தொடா்புடையதாக கோவை உக்கடம் பகுதியைச் சோ்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன்(23), கோவை ஜி.எம்.நகா் பகுதியைச் சோ்ந்த முகமது ரியாஸ் (27), ஃபிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) மற்றும் அஃப்சா் கான் (27), சேக் இதயத்துல்லா, சனோபர் அலி உள்பட 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (26.06.2026) - துலாம்
இன்றைய ராசி பலன் (26.06.2026) - மிதுனம்
இன்றைய ராசி பலன் (26.06.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (26.06.2026) - மேஷம்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


