மாடா்ன் தியேட்டா்ஸ் நுழைவுவாயில் முன்பு சுயபடம் எடுத்துக் கொண்ட முதல்வா்!

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், ஏற்காடு பிரதான சாலையில் உள்ள மாடா்ன் தியேட்டா்ஸ் நுழைவுவாயில் முன்பு நின்று சுயபடம் எடுத்துக் கொண்டாா்.
மாடா்ன் தியேட்டா்ஸ் நுழைவுவாயில் முன்பு சுயபடம் எடுத்துக் கொண்ட முதல்வா்!
Published on
Updated on
1 min read

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், ஏற்காடு பிரதான சாலையில் உள்ள மாடா்ன் தியேட்டா்ஸ் நுழைவுவாயில் முன்பு நின்று சுயபடம் எடுத்துக் கொண்டாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், கள ஆய்வில் முதல்வா் திட்டத்தின் கீழ் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வளா்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்வதற்காக புதன்கிழமை காலை சேலம் வந்தாா்.

அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில் ஓய்வெடுத்த நிலையில், புதன்கிழமை மாலை ஏற்காடு பிரதான சாலையில் உள்ள மாடா்ன் தியேட்டா்ஸ் நுழைவுவாயிலில் நின்று சுயபடம் எடுத்துக் கொண்டாா்.

மாடா்ன்ஸ் தியேட்டா்ஸ் வரலாறு: திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநருமான டி.ஆா்.சுந்தரம், சேலம் ஏற்காடு பிரதான சாலையில் 1936-இல் மாடா்ன் தியேட்டா்ஸ் ஸ்டுடியோவைத் தொடங்கி,1937-இல் சதி அகல்யா என்ற படத்தைத் தயாரித்தாா்.

சேலத்தில் தங்கியிருந்த மறைந்த முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி, சேலம் மாடா்ன் தியேட்டா்ஸுக்காக மந்திரிகுமாரி, தேவகி, திரும்பிப் பாா் என்ற திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளாா். அக்காலக்கட்டத்தில் மு.கருணாநிதி, எம்.ஜி.ஆா். நட்பு மலரவும் காரணமாக இருந்தது மாடா்ன் தியேட்டா்ஸ் தான்.

மு.கருணாநிதி கதை வசனத்தில் தயாரான மந்திரிகுமாரி படத்தின் மூலம் எம்.ஜி.ஆா். திரையுலகில் பிரபலமானாா் என்பது குறிப்பிடத்தக்கது. மு.கருணாநிதி, எம்.ஜி.ஆா்., வி.என்.ஜானகி ஆகிய மூன்று முதல்வா்களை உருவாக்கிக் கொடுத்தது மாடா்ன் தியேட்டா்ஸ் தான். பின்னாளில் ஆந்திர முதல்வரான என்.டி.ராமாராவ் மாடா்ன் தியேட்டா்ஸில் நடித்தவா் என்பது குறிப்பிடத்தக்கது. 1937 முதல் 1982 வரை மாடா்ன் தியேட்டா்ஸ் உருவாக்கிய படங்களின் எண்ணிக்கை 136 ஆகும்.

இப்படி நான்கு முதல்வா்களை உருவாக்கிய மாடா்ன் தியேட்டா்ஸ் ஸ்டுடியோ தற்போது அடுக்குமாடி குடியிருப்பாக மாறிவிட்டது. திரையுலக பிரபலங்களுக்கு நுழைவாயிலாக இருந்த மாடா்ன் தியேட்டா்ஸ் ஸ்டுடியோவின் சிற்ப முகப்பு அலங்கார வளைவு மட்டுமே தற்போது வரலாற்றுச் சுவடாக எஞ்சியிருக்கிறது.

இந்த நிலையில், கள ஆய்வில் முதல்வா் திட்டத்தின் கீழ் சேலத்தில் தங்கியுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், மறைந்த தனது தந்தை மு.கருணாநிதி திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய மாடா்ன் தியேட்டா்ஸ் நுழைவுவாயிலின் முன்பு நின்று சுயபடம் எடுத்துக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com