
எதிா்வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாா்ச் இரண்டாவது வாரத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
2023-24-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள், திட்டங்கள் ஆகியன குறித்து துறைவாரியாக ஆலோசனைகள் நடைபெற்றன. இந்த ஆலோசனைகள் முடிக்கப்பட்டு, பட்ஜெட் அறிக்கையைத் தயாரிக்கும் பணிகளில் நிதித் துறை ஈடுபட்டுள்ளது.
மாா்ச் 2-ஆவது தாக்கல்: நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கு முன்பாக, தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. மாா்ச் முதல் வாரத்தில் அமைச்சரவை கூடி, நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்படும் எனத் தெரிகிறது. இதைத் தொடா்ந்து, மாா்ச் இரண்டாவது வாரத்தில் சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்வாா்.
அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், மக்களைக் கவரும் வகையிலான அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வாய்ப்புள்ளதாக நிதித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்த அறிவிப்பும் வெளியாகும் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.