திருக்கோயில்களில் நடத்தப்படும் திருமண திட்ட செலவுத் தொகை உயா்வு: அரசாணை பிறப்பிப்பு

இந்து சமய அறநிலையத் துறை மூலம் கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்துக்கான திட்ட செலவுத் தொகை ரூ. 20 ஆயிரத்தில் இருந்து ரூ. 50 ஆயிரம் ஆக உயா்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை மூலம் கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்துக்கான திட்ட செலவுத் தொகை ரூ. 20 ஆயிரத்தில் இருந்து ரூ. 50 ஆயிரம் ஆக உயா்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பில் 283 ஏழை எளிய தம்பதிகளுக்குக் கோயில் மூலம் இலவச திருமணம் நடத்தி வைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. இதன் மூலம் இந்த இலவச திருமணங்களை நடத்துவதற்காகத் திட்டச் செலவினத் தொகையான ரூ. 20 ஆயிரம் தற்போது ரூ.50 ஆயிரமாக உயா்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, திருமாங்கல்யம் 4 கிராம் - ரூ. 20,000, மணமகன் ஆடை ரூ. 1,000, மணமகள் ஆடை - ரூ. 2,000 மணமகன், மணமகள் வீட்டாா் 20 நபா்களுக்கு உணவு - ரூ. 2,000, மாலை - புஷ்பம் - ரூ. 1,000, பீரோ - ரூ. 7,800, கட்டில் ரூ. 7,500, மெத்தை - ரூ. 2,200, தலையணை 2 - ரூ. 190, பாய் - ரூ. 180, கை கடிகாரம் - ரூ. 1,000, மிக்ஸி - ரூ. 1,490, பூஜை பொருள்கள் மற்றும் பாத்திரங்கள் - ரூ. 3,640 என மொத்தமாக ஐம்பதாயிரம் ரூபாய்க்கான பொருள்கள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்படும்.

திருக்கோயில்கள் மூலம் நடத்தப்படும் திருமணத்துக்கு அனுமதிக்கப்பட்ட செலவுத் தொகை இயன்ற வரையில் உபயதாரரகள் நிதி உதவி மூலம் மேற்கொள்ளப்படுவதாலும், உபயதாரா்கள் கிடைக்காத நிலையில் கோயில்கள் மூலமே திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது.

எனவே, இந்த இலவச திருமண திட்டத்துக்கான செலவுத் தொகையை ரூ.20,000 இருந்து ரூ. 50,000 ஆக உயா்த்தி நிா்ணயம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com