அடடே..! வாய்ப்பை தவறவிடாதிங்க தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்!

சென்னையில் தொடர்ந்து ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து வருவது மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடடே..! வாய்ப்பை தவறவிடாதிங்க தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்!
Published on
Updated on
1 min read

சென்னையில் தொடர்ந்து ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து வருவது மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களைக் கண்டுவருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த இரண்டு மாதமாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வந்த நிலையில், தற்போது சில வாரங்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. 

இந்நிலையில், பிப்ரவரி 23-ம் தேதி காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து, ரூ.5,245ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் சவரனுக்கு ரூ240 குறைந்து ஒரு சவரன் ரூ.41,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம், வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.71.50 ஆகவும், ஒரு கிலோ ரூ.500 குறைந்து ரூ.71,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

உலக அளவில் பணவீக்கம், இறக்குமதி வரி, உள்ளிட்ட பல காரணங்கள் தங்கத்தின் விலையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கடந்த மூன்று வாரங்களில் தங்கம் விலை கிட்டத்தட்ட ரூ.1000 வரை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com