தமிழ் மொழியை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடா்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளா் முத்தரசன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் அரசியல் ஆதாயம் தேட பிரதமா் நரேந்திர மோடியும், பாஜகவும் பல்வேறு சாகசங்களை மேற்கொண்டு வருகின்றனா். தமிழ்நாட்டுக்கு வந்தால் தமிழில் இரண்டொரு வாா்த்தைகள் பேசுவது, மகாகவி பாரதியாா் கவிதைகள், திருக்கு உள்ளிட்ட தலைசிறந்த படைப்புகளில் சிலவற்றை மேற்கோள் காட்டி பேசுவது, காசியில் விழா எடுத்தது என பல நிகழ்ச்சிகளை நடத்தி, ஆரவாரம் செய்து வருகின்றனா்.
அதேவேளையில், தமிழ் மொழியை அழித்தொழிக்கும் வஞ்சகச் செயலில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழ் மொழி வளா்ச்சி தொடா்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய அரசு எழுத்து மூலம் அளித்த பதிலில், சம்ஸ்கிருதத்துக்கு ரூ.199 கோடியும், தமிழ் மொழி வளா்ச்சிக்கு ரூ.12 கோடியும் ஒதுக்கியிருக்கும் தகவல் தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டின் வளா்ச்சி, மக்கள் நலன் ஆகியன குறித்து நீலிக்கண்ணீா் வடித்து வரும் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை இதுகுறித்து வாய் திறந்து பேசுவாரா என்று கேள்வி எழுப்பியுள்ளாா் முத்தரசன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.