பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை (ஜன. 4) பிற்பகல் 2 மணி முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு 8 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள்.
அதன்படி, பிளஸ் 2 மாணவர்களுக்கு அடுத்த மாதம் செய்முறைத் தேர்வு தொடங்குவதால் ஹால் டிக்கெட் நாளை(ஜன. 4) இணையத்தில் வெளியிடப்பட உள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை (ஜன. 4) பிற்பகல் 2 மணி முதல் தேர்வுத்துறை இணையதளத்தில்(https://dge1.tn.gov.in/) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.
பள்ளிகள், மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்த பின்னர் மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிளஸ் 1 மாணவர்களுக்கு வரும் மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரையிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | ஜன. 12 -க்குள் பொங்கல் தொகுப்பு வழங்க நடவடிக்கை: அமைச்சர் சக்கரபாணி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ. 95.40 ஆக நிறைவு!

வெற்றி விழாவில் நன்றி சொல்கிறேன்... உதயநிதி கைதானதைக் குறிப்பிட்டு பேசிய மாதவன்!

நாளை பட்ஜெட் தாக்கல்: தவெக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை!

இந்த வார இறுதியில் நிறைவடையும் பிரபல தொடர்!
விடியோக்கள்

உதயநிதியை இளைய கலைஞர் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்! | R.S. Bharathi | DMK | TVK



