கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான  இடங்களில் 2வது நாளாக சோதனை!

கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான சென்னை உள்பட 30 இடங்களில் வருமானவரித் துறையினர் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் சோதனை நடத்தி வருகின்றனர். 
வருமான வரித்துறை சோதனை
வருமான வரித்துறை சோதனை

கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான சென்னை உள்பட 30 இடங்களில் வருமானவரித் துறையினர் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் சோதனை நடத்தி வருகின்றனர். 

கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான வங்கி கணக்குகளை வருமானவரித் துறை அதிகாரிகள் ஆய்வுக்கு உள்படுத்தினார்கள். அப்போது கணக்கில் காட்டப்படாத கூடுதல் பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் வருமானவரித் துறை அதிகாரிகள் கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும், ஹைதராபாத்திலும் இயங்கி வரும் அலுவலகங்கள் என  30-க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் மட்டும் 15 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

சென்னை பிராட்வேயில் உள்ள கூரியர் அலுவலகத்துக்கு புதன்கிழமை காலை 10 மணிக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் 6 பேரும் அலுவலகத்திற்குள் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அங்கிருந்த கூரியர் நிறுவன ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இங்கு சோதனை நடத்துவதற்காக புதன்கிழமை காலை 10 மணிக்கு வருமானவரித் துறை அதிகாரிகள் சென்றனர். ஒரே நேரத்திற்குள் அதிரடியாக அலுவலகத்தில் புகுந்து சோதனை நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில், கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் சோதனை நடத்தி வருகின்றனர்.  

சென்னையில் நுங்கம்பாக்கம், பிராட்வே உள்ளிட்ட இடங்களில் இரண்டாவது நாளாக சோதனை நடந்து வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com