
தியாகராஜரின் 176வது ஆராதனை விழாவை முன்னிட்டு, தஞ்சை மாவட்டத்திற்கு ஜனவரி 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் சுவாமிகள் முக்தியடைந்த காவிரி ஆற்றங்கரையில் 176வது ஆராதனை விழா இன்று தொடங்கியுள்ளது.
ஜனவரி 11-ம் தேதி 500-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்று தியாகராஜர் சுவாமிக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசையஞ்சலி செலுத்த உள்ளனர்.
படிக்க: தமிழகத்தில் 3 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!
இதனால், தஞ்சை மாவட்டத்திற்கு வரும் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.