சென்னையில் 15-ம் தேதி வரை இரவில் குளிர் நீடிக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னையில் 15 ஆம் தேதி வரை இரவில் குளிர் நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் 15-ம் தேதி வரை இரவில் குளிர் நீடிக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை: சென்னையில் 15 ஆம் தேதி வரை இரவில் குளிர் நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாள்களாக இரவிலும், அதிகாலையிலும் கடும் குளிர் நிலவி வருகிறது. அதே நேரத்தில் சில பகுதிகளில் கடந்த 2 நாள்களாக லேசான மழையும் காணப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் 15 ஆம் தேதி வரை இரவில் குளிர் நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அடுத்த 48 மணி நேரத்துக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் இருக்கும் என்பதால் சில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்ப நிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் 24, 25 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும்(ஜன.7,8) தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com