மிஸ்பண்ணிடாதீங்க... விமான நிறுவனத்தில் 596 பொறியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
By DIN | Published On : 07th January 2023 03:21 PM | Last Updated : 07th January 2023 03:21 PM | அ+அ அ- |

இந்திய விமான நிலைய ஆணையம் சார்பில்(ஏ.ஏ.ஐ) 596 பொறியாளர், இளநிலை எக்ஸிகியூட்டிவ், ஆர்க்கிடெக்சர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரேவற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Junior Executive (Engineering- Civil)
காலியிடங்கள்: 62
பணி: Junior Executive (Engineering- Electrical)
காலியிடங்கள்: 84
பணி: Junior Executive (Electronics)
காலியிடங்கள்: 440
பணி: Junior Executive (Architecture)
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2020,2021,2022 ஆண்டு நடத்தப்பட்ட கேட் தேர்வுகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 21.1.2023 தேதியின்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.aai.aero என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.1.2023
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...