உச்ச நீதிமன்றத்தில் குரூப் ‘சி’ காலியிடங்கள் அறிவிப்பு: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற அரசு சாராத பணியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
உச்ச நீதிமன்றத்தில் குரூப் ‘சி’ காலியிடங்கள் அறிவிப்பு: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?


இந்திய உச்ச நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள உதவிப் பதிவாளர், கிளை அதிகாரி, மூத்த நீதிமன்ற உதவியாளர், நீதிமன்ற உதவியாளர், இளநிலை நீதிமன்ற உதவியாளர் போன்ற குரூப் ‘சி’ பணியிடங்களை குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற அரசு சாராத பணியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Assistant Registrar
சம்பளம்: மாதம் ரூ.45,000

பணி: Branch Officer
சம்பளம்: மாதம் ரூ.40,000

பணி: Senior Court Assistant
பணி: Court Assistant
பணி: Junior Court Assitant

சம்பளம்: மாதம் ரூ.35,000 மற்றும் அலுவலர் அல்லாத குரூப் ‘சி’ பணிகளுக்கு ரூ.20,000

வயதுவரம்பு: 65க்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:  அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Branch Officer, Recruitment Cell,
Tilak Marg, New Delhi-110001 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடை நாள்: 20.1.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com