ரூ.1,30,800 சம்பளத்தில் தமிழ்நாடு அரசில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!
By | Published On : 04th January 2023 03:28 PM | Last Updated : 04th January 2023 03:28 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
தமிழ்நாடு பொது சார்நிலைப் பணியில் அடங்கிய இளநிலை மறுவாழ்வு அலுவலர்(மாற்றுத்திரனாளிகளுக்கான மாநில ஆணையரகம்) பதவிக்கான காலியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான கணினிவழித் தேர்விற்கான அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு வரும் 7 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.641 அறிக்கை எண்:35/2022
பணி: இளநிலை மறுவாழ்வு அலுவலர்(Junior Rehabilitation Officer )
காலியிடங்கள்: 7
சம்பளம்: மாதம் ரூ.35,600 - 1,30,800
வயது வரம்பு: 1.7.2022 தேதியின்படி, அதிகபட்ச வயதானது 37 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயதுவரம்பு சலுகைகள் அறிய அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் உளவியல், சமூக வேலை அல்லது சமூகவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் கணினி வழி ஆன்லைன் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் இட ஒதுக்கீடு விதிகளின் படி தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் www.tnpscexams.in/ www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 7.1.2023 ஆம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்: நிரந்தப் பதிவுக் கட்டணம் - ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
நிரந்தர பதிவில் பதிவு செய்த நாளில் இருந்து 5 ஆண்டு கள் முடிவுறாத விண்ணப்பதாரர்கள் இத்தேர்வுக்கான நிரந்த பதிவுக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றனர்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 7.1.2023
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...