ராணுவத்தில் அதிகாரி வேலை வேண்டுமா? யுபிஎஸ்சி அறிவிப்பு!

ராணுவத்தில் காலியாக உள்ள 395 அதிகாரிப் பணியிடங்களுக்கான என்டிஏ தேர்வுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
ராணுவத்தில் அதிகாரி வேலை வேண்டுமா?  யுபிஎஸ்சி அறிவிப்பு!
Published on
Updated on
1 min read


ராணுவத்தில் காலியாக உள்ள 395 அதிகாரிப் பணியிடங்களுக்கான என்டிஏ தேர்வுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிவிப்பு எண்.03/2023-NDA-1

தேர்வின் பெயர்: National Defence Academy & Naval Academy Examination-2023

காலியிடங்கள்: 395

வயதுவரம்பு: 2.7.2004க்கும் 1.7.2007க்கும் இடைபட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும். 

தகுதி: இயற்பியல், கணிதத்தை ஒரு பாடமாகக் கொண்ட பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் எஸ்எஸ்பி ஆல் நடத்தப்படும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 16.4.2023

தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர், புதுச்சேரி

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: ஜூலை 2023 - செப்டம்பர்- 2023
எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நேர்முகத் தேர்வில் தேர்வானவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

பயிற்சி ஆரம்பமாகும் தேதி: ஜனவரி-2024

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.upsconlin.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.1.2023

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com