ரூ.92,300 சம்பளத்தில் உதவி சார்பு ஆய்வாளர் பணி: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?
By | Published On : 05th January 2023 03:01 PM | Last Updated : 05th January 2023 03:01 PM | அ+அ அ- |

மத்திய துணை காவல் படையில் நிரப்பப்பட உள்ள 1458 உதவி சார்பு ஆய்வாளர் (சுருக்கெழுத்தர்) மற்றும் தலைமைக் காவலர்(எழுத்துப்பணி) பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இந்தியாவில் வசிக்கும் ஆண், பெண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: உதவி சார்பு ஆய்வாளர்(சுருக்கெழுத்தர்)
காலியிடங்கள்: 143
சம்பளம்: மாதம் ரூ.29,200 - 92,300
பணி: தலைமைக் காவலர்(எழுத்துப் பணி)
காலியிடங்கள்: 1315
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
வயதுவரம்பு: 25.1.2023 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பத்தாரர் 16.1.1998 முன்பு அல்லது 25.1.2005 தேதிக்கு பின்னர் பிறந்திருக்கக் கூடாது.
தகுதி: மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இடைநிலை(10+2) அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.100. எஸ்சி, எஸ்டி, பெண் விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: http://www.crpfindia.com அல்லது http://www.crpf.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய http://www.crpf.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...