நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை: வாய்ப்பை நழுவவிடாதீர்கள்..!
By | Published On : 07th January 2023 10:59 AM | Last Updated : 07th January 2023 11:36 AM | அ+அ அ- |

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் புதிதாக 450 பருவகால பட்டியல் எழுத்தர், உதவுபவர், காவலர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களடம் இருந்து வரும் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ந.க.எண். 2/10557/2022
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: பட்டியல் எழுத்தர்
காலியிடங்கள்: 150
சம்பளம்: ரூ.8,754 மற்றும் தினசரி போக்குவரத்துப்படியாக ரூ.120 வழங்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பி.எஸ்சி., பிஇ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: உதவுபவர்
காலியிடங்கள்: 150
சம்பளம்: மாதம் ரூ.8,717 மற்றும் தினசரி போக்குவரத்துப்படி ரூ.100 வழங்கப்படும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: காவலர்
காலியிடங்கள்: 150
சம்பளம்: 8717 மற்றும் தினசரி போக்குவரத்துப்படி ரூ.100 வழங்கப்படும்.
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு 1.7.2022 தேதியின்படி பொதுப்பிரிவினர் 32க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினருக்கு 5 ஆண்டுகள், பிசி, எம்பிசி பிரிவினருக்கு 2 ஆண்டுகள் வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், 10, குருவிக்காரன் சாலை, அண்ணாநகர், மதுரை - 20
நேர்முகத் தேர்வுகள் நடைபெறும் தேதி: தகுதியானவர்களுக்கு 18.1.2023 முதல் 24.1.2023 வரை நேர்முகத் தேர்வு நடைபெறும். இதுகுறித்த தகவல் தகுதியானவர்களுக்கு அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
மேலும் விவரங்கள் அறிய www.tncsc.tn.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...