மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 11,705 காலியிடங்கள் அறிவிப்பு? 

பாரத் சஞ்சார் நிகாம் எனப்படும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 11,705 இளநிலை தொலைத்தொடர்பு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

News image
Updated On :7 ஜனவரி 2023, 9:13 am


பாரத் சஞ்சார் நிகாம் எனப்படும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 11,705 இளநிலை தொலைத்தொடர்பு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக இணையதளங்களில் தகவல் வெளியாகி வருகின்றன. ஆனால், அப்படியொரு அறிவிப்பு வெளியிடப்படவில்லை என பிஎஸ்என்எல் அதிகாரிகளின் தெரிவித்துள்ளனர். 

இணையதளங்களில் வைராகும் வேலைவாய்ப்பு குறித்த தகவல் இதோ உங்களின் கவனத்திற்காக: 

பணி: இளநிலை தொலைத்தொடர்பு அலுவலர்(Junior Telecom Officers)

காலியிடங்கள்: 11,705

தகுதி: பொறியியல் துறையில் டிப்ளமோ, இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.bsnl.co.in என்ற இணையதளத்தின் மூலம் வரும் 30 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இணையதளங்களில் மேற்கண்ட காலியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எச்சரிக்கை: இதுகுறித்து பிஎஸ்என்எல் அதிகாரிகளின் சமீபத்தில் வெளியிட்டுள்ள  அறிவிப்பில், மேற்கண்டவாறு வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த தகவல்கள் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) ஆட்சேர்ப்பு ஆணையத்தால் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படவில்லை எனவும், போலியான அறிவிப்புகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என தெரிவித்துள்ளனர். 

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இயக்குநர்(எச்ஆர்) வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Director(HR)
தகுதி: மனிதவள மேலாண்மையில் எம்பிஏ, பிஜிடிப்ளமோ முடித்து குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: https://pesb.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
Smt Kimbuong Kipgen
Secretary,
Public Enterprises Selection Board, Public Enterprises Bhawan,
BlockNo. 14, CGO Complex, Lodhi Road, New Delhi-110003.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.03.2023

அதிகாரப்பூர்வ அறிப்பை பார்க்க கிளிக் செய்யவும். 

Related Article

உச்ச நீதிமன்றத்தில் குரூப் ‘சி’ காலியிடங்கள் அறிவிப்பு: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை: வாய்ப்பை நழுவவிடாதீர்கள்..!

ராணுவத்தில் அதிகாரி வேலை வேண்டுமா? யுபிஎஸ்சி அறிவிப்பு!

ரூ.92,300 சம்பளத்தில் உதவி சார்பு ஆய்வாளர் பணி: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?

ரூ.1,30,800 சம்பளத்தில் தமிழ்நாடு அரசில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.