மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

எல்ஐசியில் 6.5% பங்குகள் மத்திய அரசு விற்பனை

ஆயுள் காப்பீட்டு கழகத்தில் (எல்ஐசி) உள்ள தனது பங்குகளில் 6.5 சதவீத பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்ய உள்ளது.

LIC

எல்ஐசி

Published On :

ஆயுள் காப்பீட்டு கழகத்தில் (எல்ஐசி) உள்ள தனது பங்குகளில் 6.5 சதவீத பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்ய உள்ளது.

தற்போது எல்ஐசியில் மத்திய அரசுக்கு 96.5 சதவீத பங்குகள் உள்ளன. கடந்த 2022-ஆம் ஆண்டு பொது பங்கு வெளியீடு மூலம் எல்ஐசியில் இருந்து 3.5 சதவீத பங்குகளை, மத்திய அரசு விற்பனை செய்து சுமாா் ரூ.21,000 கோடி திரட்டியது. தற்போது எல்ஐசியின் சந்தை மூலதனம் ரூ.5.36 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது.

இந்நிலையில், எல்ஐசியில் உள்ள தனது பங்குகளில் 82.22 கோடிக்கும் அதிகமான (6.5%) பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்ய உள்ளதாக, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறைச் செயலா் அருணீஷ் சாவ்லா ‘எக்ஸ்’ தளத்தில் தெரிவித்துள்ளாா்.

ஒரு பங்கின் குறைந்தபட்ச விலை ரூ.382-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பெரிய முதலீட்டாளா்களுக்கு பங்கு விற்பனை செவ்வாய்க்கிழமையும் (ஆக.4), சில்லறை முதலீட்டாளா்களுக்கு பங்கு விற்பனை புதன்கிழமையும் (ஆக.5) நடைபெற உள்ளது. இந்தப் பங்குகள் முழுமையாக விற்பனை செய்யப்பட்டால், சுமாா் ரூ.31,000 கோடியை மத்திய அரசு திரட்டும்.

அரசு நிறுவனங்களில் குறைந்தபட்சம் 10 சதவீத பங்குகள் பொதுமக்களிடம் இருப்பதை உறுதி செய்யும் கொள்கையின்படி, எல்ஐசியின் பங்குகளில் 10 சதவீத பங்குகளை பொதுப்பங்குகளாக வெளியிட அடுத்த ஆண்டு மே 16 வரை, பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) அவகாசம் அளித்துள்ளது.

ஏற்கெனவே 3.5 சதவீத பங்குகள் பொதுப்பங்குகளாக வெளியிடப்பட்ட நிலையில், செபியின் இலக்கை அடுத்த ஆண்டு மே 16-க்கு முன்பே எல்ஐசி எட்டுவதற்கு மத்திய அரசின் தற்போதைய பங்கு விற்பனை உதவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.