தொல்காப்பியர் பூங்கா ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு: முதல்வர் வழங்கினார்

சென்னை அடையாறு தொல்காப்பியர் பூங்கா ஊழியர்களுக்கு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 
தொல்காப்பியர் பூங்கா ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு: முதல்வர் வழங்கினார்

சென்னை அடையாறு தொல்காப்பியர் பூங்கா ஊழியர்களுக்கு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, சென்னை அடையாறு தொல்காப்பியர் பூங்கா ஊழியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பொங்கல் பரிசு வழங்கினார். 

தொல்காப்பியர் பூங்காவிற்கு நடைப்பயிற்சிக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் சுற்றியுள்ள பொதுமக்கள் என 50 பேருக்கு கரும்பு, புத்தாடையுடன் கூடிய பொங்கல் பரிசு வழங்கினார்.

இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

முன்னதாக, தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முழு நீள கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன்களை வீடு வீடாகச் சென்று விநியோகிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜன. 9-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் தொகுப்பினை வழங்கி தொடக்கிவைக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com