அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜார்!

பண விவகாரம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் பெற்றிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி‌.சம்பத், பண்ருட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜார்!

நெய்வேலி: பண விவகாரம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் பெற்றிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி‌.சம்பத், பண்ருட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானார்.

பண விவகாரம் தொடர்பாக எம்.சி.சம்பத் மற்றும் அவரது உதவியாளர் குமார் இருவருக்கு இடையில் கருத்து வேறுபாடு இருந்தது. 

இந்நிலையில், குமாரின் மாமனார் ராமச்சந்திரன், மாமியார் ஜோதி ஆகியோரை எம்.சி.சம்பத் தூண்டுதல் பெயரில் அவரது சகோதரர் எம்.சி.தங்கமணி உள்ளிட்டோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இது தொடர்பாக, பண்ருட்டி போலீசார் ஜன.2 ஆம் தேதி எம்.சி.சம்பத் உள்ளிட்ட 14 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி எம்.சி.சம்பத்தின் வழக்குரைஞர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி எம்.சி.சம்பத்திற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

இந்நிலையில், பண்ருட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் எம்.சி.சம்பத் நீதிபதி முன்பு திங்கள்கிழமை ஆஜரானார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com