காலை சிற்றுண்டி திட்டத்தால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது: ஆளுநர் உரை

காலை சிற்றுண்டி திட்டத்தால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். 
காலை சிற்றுண்டி திட்டத்தால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது: ஆளுநர் உரை

காலை சிற்றுண்டி திட்டத்தால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். 

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டப்பேரவை இன்று கூடியுள்ளது. புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநா் ஆா்.என்.ரவியின் உரையுடன் கூட்டத்தொடா் தொடங்கியது. ஆளுநர் தனது உரையில், கடந்த 50 ஆண்டுகாலத்தில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது. பல்வேறு துறைகளில் நாட்டுக்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. விற்பனை விலை பாதிக்காமல் பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தி உள்ளது. தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை காக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

மீனவர்களுக்கு முன்னிரிமை அளித்து தமிழ்நாடு அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 2 புதிய பறவைகள் சரணாலயம் மற்றும் அகஸ்தியர் மலை யானைகள் சரணாலயம் தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. அழிந்து வரும் உயிரினமான நீலகிரி வரையாடு இனத்தை காக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னையில் தமிழ்நாட்டின் நலனை பாதுகாத்து வருகிறது தமிழ்நாடு அரசு. முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி நீரை தமிழ்நாடு அரசு தேக்குகிறது. நீர்மட்டத்தை உயர்த்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ரூ.1,500 கோடியில் தமிழ்நாடு நீர்வளத்தை பெருக்குவதற்கான திடடங்களை மேற்கொண்டு வருகிறது. மேக்கேதாட்டு அணையை கட்டக்கூடாது என்பதில் தமிழ்நாடு உறுதியாக இருக்கிறது. 

பல்வேறு இடங்களில் மினி டைடல் பார்க் தொடங்கப்பட்டு வருகிறது. முதல்வரின் காலை உணவுத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. காலை சிற்றுண்டி திட்டத்தால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கையை அரசு தொடங்கியுள்ளது. பரந்தூர் விமான நிலையம் மூலம் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்துள்ளன. சுமார் 28 ஆயிரம் கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுகள் தமிழகத்திற்கு வந்துள்ளன. குறைந்த கால நேரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தியது. நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளது. மாநில உரிமையை பறிக்கும் வகையிலும், கிராமப்புற மாணவர்களுக்கு எதிராகவும் நீட் தேர்வு உள்ளது. 

கிராமப்புற மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்கு புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பேராசிரியர் அன்பழகன் பெயரில் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.  இவ்வாறு அவர் குறிப்பிட்டார். கூட்டத்தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க, அலுவல் ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நண்பகலில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பேரவை கூட்டத்தொடரின் நாள்கள் இறுதி செய்யப்படும். திங்கள்கிழமை ஆளுநா் உரையாற்றிய பிறகு, பேரவை ஒத்திவைக்கப்படும். இதன்பின், செவ்வாய்க்கிழமை பேரவை மீண்டும் கூடி, காங்கிரஸ் உறுப்பினா் திருமகன் ஈவெரா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். சட்டப் பேரவை உறுப்பினா் என்பதால், அன்றைய நாள் முழுவதும் பேரவை ஒத்திவைக்கப்படும். இதைத் தொடா்ந்து, புதன்கிழமை (ஜன. 11) முதல் வெள்ளிக்கிழமை (ஜன. 13) வரை பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் பேரவையில் புதன்கிழமை முன்மொழியப்பட்டு அந்தத் தீா்மானத்தின் மீது விவாதங்கள் நடைபெறும். 

இதில், ஆளும் கட்சி மற்றும் எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் உரையாற்றுவா். தீா்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசுவாா். இதன்பிறகு, கூட்டத் தொடரை தேதி குறிப்பிடாமல் பேரவைத் தலைவா் மு.அப்பாவு ஒத்திவைப்பாா். சட்டம்-ஒழுங்கு, பொங்கல் தொகுப்பு, ஆசிரியா்கள், செவிலியா்கள் போராட்டப் பிரச்னைகளை எதிா்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. இந்தப் பிரச்னைகள் சட்டப்பேரவையில் எதிரொலிக்கும் எனத் தெரிகிறது. அதேசமயம், எதிா்க்கட்சிகள் எழுப்பும் பிரச்னைகளுக்கு உரிய பதில்களை அளிக்க அரசுத் தரப்பும் தயாராகி வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com