இன்றைய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 48 பக்கங்களைக் கொண்ட ஆளுநர் உரையில் 33 இடங்களில் 'தமிழ்நாடு அரசு' என இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஆளுநர் ஆர்.என். ரவி பதவியேற்றதில் இருந்தே திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் நீடித்துவருகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக நீண்ட நாள்களாகக் காத்திருக்கின்றன.
இந்நிலையில் சமீபத்தில் ஆளுநர் மாளிகையின் நிகழ்வொன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, 'தமிழ்நாடு என அழைப்பதைவிட தமிழகம் என அழைப்பதுதான் சரியாக இருக்கும்' என ஆளுநர் பேசியதையடுத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில்தான் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றைய ஆளுநர் தொடக்க உரை கடும் கொந்தளிப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
அரசு தயாரித்து அளித்த உரையில் உள்ள தமிழ்நாடு என்ற வார்த்தையை உச்சரிப்பதைத் தவிர்த்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக மக்கள் போற்றும் முக்கிய தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பெயர்களையும் அவர் குறிப்பிடவில்லை. உடனே, சட்டப்பேரவையிலேயே இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்த நிலையில் ஆளுநர் பாதியிலேயே சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார். தேசிய கீதம் இசைப்பதற்கு முன்னதாகவே ஆளுநர், பேரவையைவிட்டு வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு தயாரித்து ஆளுநர் ஒப்புதல் அளித்த 48 பக்கங்கள் கொண்ட உரையில் 33 இடங்களில் 'தமிழ்நாடு அரசு' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஆளுநர் உரை: தெலங்கானா வழி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.