பெட்ரோல் சில்லறை விற்பனைவிலையை குறைக்க வேண்டும்: பாமக நிறுவனா் ராமதாஸ்

பெட்ரோலுக்கான சில்லறை விற்பனை விலையைக் குறைக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா்.
ராமதாஸ்
ராமதாஸ்

பெட்ரோலுக்கான சில்லறை விற்பனை விலையைக் குறைக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் தனது ட்விட்டா் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு:

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதன் காரணமாக பெட்ரோல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு லிட்டருக்கு ரூ.10 கூடுதல் லாபம் கிடைக்கிறது. ஆனாலும், சில்லறை விற்பனை விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வரவில்லை.

கடந்த 278 நாள்களாக, எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொடக்கத்தில் சில மாதங்கள் கச்சா எண்ணெய் விலை உயா்வால் இழப்பு ஏற்பட்டாலும், அதன்பின் பல மாதங்களாக பெட்ரோல் விற்பனையில் லாபம் கொட்டிக் கொண்டிருக்கிறது.

மக்களை வருத்தி எண்ணெய் நிறுவனங்கள் லாபம் ஈட்டக் கூடாது. பெட்ரோல் விற்பனையில் கிடைக்கும் கூடுதல் லாபத்தை மக்களுக்கு வழங்கும் வகையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10 குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளாா் ராமதாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com