ஒன்றிய அரசு என்பதை அரசியலாக்குவதுதான் பிரச்னை: ஆளுநர் ஆர்.என். ரவி

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார்.
ஒன்றிய அரசு என்பதை அரசியலாக்குவதுதான் பிரச்னை: ஆளுநர் ஆர்.என். ரவி
ஒன்றிய அரசு என்பதை அரசியலாக்குவதுதான் பிரச்னை: ஆளுநர் ஆர்.என். ரவி

சென்னை: ஒன்றிய அரசு என்பது தவறில்லை. ஆனால் அதனை வைத்து அரசியல் செய்யும் போதுதான் பிரச்னை ஆகிறது என்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார்.

ஒன்றிய அரசு என்று அழைப்பதிலும், தமிழ்நாடு என்று அழைப்பதிலும் ஆளுநர் ரவிக்கும் - தமிழ்நாடு அரசுக்கும் இடையே சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று தமிழ்நாடு என்று அழைப்பதைத் தவிர்த்த ஆளுநர் ஆர்.என். ரவி, இன்று ஒன்றிய அரசு என்பதை அரசியலாக்குவது தவறு என்று பேசியிருக்கிறார்.

இந்திய குடிமைப் பணி நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளவிருக்கும் 80 மாணவர்கள் பங்கேற்ற எண்ணித் துணிக என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராகிவருவோர் மத்தியில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, இந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை. எந்த மொழியும் கற்பது தவறில்லை. அது அந்த மக்களுடன் இணைந்து பணியாற்ற உதவும். இந்தியாவில் அதிக மக்கள் இந்தி பேசுவதால் இந்தி கற்றுக் கொள்வது பயன்படும் என்று கூறினார்.

மேலும், நேர்முகத் தேர்வு என்பது மனத்திடத்தை சோதிக்கும் தேர்வு என்பதால், நீங்கள் திடமாகவும் எனர்ஜியாகவும் இருக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் மக்களுக்காக பணியாற்ற உள்ளீர்கள். சிரித்த முகத்துடன் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும்.

கேள்விகளுக்கு அவசரமாக பதிலளிக்க வேண்டாம். நிதானமாக பதில் அளியுங்கள். நீங்கள், நீங்கள்தான். நீங்கள் மற்றவர்கள் அல்ல. பதில் தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று சொல்ல வேண்டும். அதை சங்கடமாகக் கருத வேண்டாம் என்று கூறினார் ஆளுநர் ஆர்.என். ரவி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com