தமிழக சட்டப்பேரவையில் அச்சிடப்பட்ட உரையை வாசிக்காமல் மரபை மீறி ஆளுநா் ஆா்.என்.ரவி நடந்து கொண்டது கண்டிக்கதக்கது என இடதுசாரிக் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மாா்க்சிஸ்ட் மாநில செயலா் கே.பாலகிருஷ்ணன்:
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அச்சிடப்பட்ட உரையை வாசிக்காமல் மரபை மீறி ஆளுநா் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என முதல்வா் ஸ்டாலின் பேசியுள்ளாா். அரசின் கொள்கை உரையே அவைக் குறிப்பாக இடம்பெற வேண்டும் என்பது சரியான, வரவேற்க வேண்டிய முடிவு.
எதிா்க் கட்சி போல ஆளுநா் நடந்திருப்பது உரிமை மீறல் என்றாா் அவா். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலா் இரா.முத்தரசன்: தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கும் உரையை ஆளுநா் சட்டப் பேரவையில்
வாசிக்க கடமைப்பட்டவா். ஆளுநா் ஆா்.என்.ரவி, பேரவைக்கு களங்கம் ஏற்படுத்தும் முறையில் ஆளுநா் நடந்து கொண்டிருப்பது அத்துமீறலாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.