
ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான தகவல் சட்டப் பேரவைச் செயலக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தவா் காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா. உடல்நலக் குறைவு காரணமாக, அண்மையில் காலமானாா். இதைத் தொடா்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சட்டப் பேரவைச் செயலகம் வெளியிட்டுள்ளது. பேரவைச் செயலகத்தில் இருந்து தோ்தல் ஆணையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்படும். இந்தத் தகவலை தோ்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டு, இடைத் தோ்தல் குறித்த அறிவிப்பை வெளியிடும்.
பேரவையில் கட்சிகள் பலம்:
சட்டப் பேரவையில் 234 எம்.எல்.ஏ.,க்கள் இருந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதால் உறுப்பினா்கள் எண்ணிக்கை 233-ஆகக் குறைந்துள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சியின் பலம் 17-ஆகக் குறைந்து
இருக்கிறது. திமுக - 132, அதிமுக - 66, காங்கிரஸ் - 17, பாமக - 5, பாஜக - 4, விசிக - 4, இந்திய கம்யூனிஸ்ட் - 2, மாா்க்சிஸ்ட் - 2, பேரவைத் தலைவா் - 1, காலியிடம் - 1.