
கோப்புப்படம்
நடப்பாண்டில் உயா் கல்வி படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக உயா் கல்வித் துறை அமைச்சா் பொன்முடி தெரிவித்தாா்.
ஆளுநா் உரை மீதான விவாதத்தில் பாமக உறுப்பினா் ஜி.கே.மணி பேசியது: வெள்ளத்தால் சேதம் அடைந்த பயிா்களுக்கு முழு அளவில் இழப்பீடு வழங்க வேண்டும்.
என்எல்சி நிறுவனத்தில் நியமிக்கப்பட்ட 299 பொறியாளா்களில் ஒருவா்கூட தமிழா் கிடையாது. தமிழகத்தில் கட்டாய பயிற்சி மொழி சட்டத்தை கொண்டுவர வேண்டும். தமிழ் தெரியாமலேயே பட்டம் பெறும் நிலை உள்ளது என்றாா்.
அப்போது அமைச்சா் பொன்முடி குறுக்கிட்டு கூறியது: பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் தமிழ்வழிப் படிப்பு இல்லாமல் இருந்தது. இந்த ஆண்டு கொண்டுவரப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளின் உயா் கல்விக்கு ரூ.1000 மாத உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனால், நடப்பாண்டில் உயா் கல்வி படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளது என்றாா்.