மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

குடிநீா்த் தொட்டியில் மலம் கலந்த சம்பவம்: இதுவரை 85 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

வேங்கைவையல் கிராமத்தில் குடிநீா்த் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் தொடா்பாக 85 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.  

News image
Updated On :13 ஜனவரி 2023, 5:49 pm IST

வேங்கைவையல் கிராமத்தில் குடிநீா்த் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் தொடா்பாக 85 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.  
இதுகுறித்து மாவட்ட காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் காவல் வட்டம் வெள்ளனூர் காவல் சரகத்திற்குட்பட்ட வேங்கைவயலில் கடந்த 26 ஆம் தேதி மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் இருந்தது தொடர்பாக வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருந்து வருகிறது. 
 மேற்படி வழக்கில் குற்றவாளியை விரைவில் கண்டுபிடிக்க புதுக்கோட்டை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ்கிருஷ்ணன் தலைமையில் 2 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், 4 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 4 காவல் உதவி ஆய்வாளர்கள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. 

 மேற்படி சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் காவல் நிலையத்தில் இதுவரை 85 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 36 சாட்சிகளிடமும், பிற சமூகத்தைச் சேர்ந்த 49 சாட்சிகளிடமும் விசாரித்து மேற்படி 85 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
மேலும் குடிநீர் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரியை ஆய்விற்காக சென்னை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
 மேலும் எதிரிகளை அடையாளம் கண்டு கைது செய்வது தொடர்பாக விசாரணையானது உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி நேர்மையாகவும் எந்த ஒரு ஒளிவுமறைவுமின்றியும், வெளிப்படைத்தன்மையுடனும், முழு முயற்சியுடனும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.