மடங்களின் நிலங்களைப் பிற பயன்பாட்டுக்கு சட்டப்படிதான் வழங்க முடியும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.
சட்டப்பேரவையில் ஆளுநா் உரை மீதான விவாதத்தில் விசிக உறுப்பினா் சிந்தனைச் செல்வன் பேசும்போது, அரசுக் கல்வி நிறுவனங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு கோயில் நிலங்களைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
அதற்கு, அமைச்சா் பி.கே.சேகா்பாபு, கோயில் நிலங்களை குத்தகைக்கு விடுவது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் நீண்ட காலம் சட்டப் போராட்டம் நடத்தினாா். அதற்கு வெற்றி கிடைத்துள்ளது. அது தொடா்பாக நீதிபதியும் ஒப்புதல் அளித்துள்ளாா். கோயில் நிலங்களை அரசுக் கல்வி நிறுவனங்களுக்குப் பயன்படுத்த முடியும். அதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என்றாா்.
சிந்தனைச் செல்வன் (விசிக): தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட மடங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு லட்சக்கணக்கான ஏக்கரில் நிலங்கள் உள்ளன. அவற்றுக்கும் நில உச்சவரம்பு சட்டம் கொண்டுவர வேண்டும்.
அமைச்சா் பி.கே.சேகா்பாபு: மடங்கள் சட்டப்படிதான் பிற பயன்பாட்டுக்கு நிலங்களை வழங்க முடியும். அதற்கேற்ப சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.